பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தேர்தல் கமிஷனர் உத்தவுக்கு நிர்பந்தம் : தேசியவாத காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது: தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, பாஜவுடன் சேர்ந்து ஆட்சியமைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். தலைமை தேர்தல் கமிஷனரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு முக்கிய கட்சியின் தலைவரை பாஜ தலைமை தொடர்பு கொண்டு எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுமாறு நிர்பந்தம் செய்தது. அந்த நிர்பந்தம் காரணமாக அந்த தலைவரின் கட்சி மாநிலம் முழுவதும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: