செலவுக்கு பார்த்ததால் புதைகுழி விபரீதம்: கோவிந்தராஜன், சென்னை மாநகர போர்வெல் உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர்

ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் போது முறையாக விதிகளை கடைபிடிக்க வேண்டும்; அப்படி இல்லாமல் கிணறுகளை மூடாமல் விடுவதால் தான் விபரீத சம்பவங்கள் நடக்கின்றன. இதை  தடுக்க முழுக்க முழுக்க மக்களிடம் விழிப்புணர்வு தேவை. வழக்கமாக வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. திருச்சி மணப்பாறை அருகே குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு, 500 முதல் 600 அடி வரை அமைத்துள்ளார் உரிமையாளர். அதில் 50 முதல் 60 அடியில் ஏழு அங்குலத்தில் ஒரு பைப்புகள் இறக்கப்படும். அதில் 2 மாத சிசு தான் அதில் சிக்க முடியும்;  3 மாத குழந்தைகள் கூட ஏழு அங்குல பைப்புகளில் சிக்க வாய்ப்பில்லை. அதுவரை போர்வெல் போட்டுக் கொள்ளத்தான்  அரசு அனுமதி உள்ளது.  மணப்பாறை சம்பவத்தில், போர்வெல் போட்ட பைப்புகளை எடுக்கவில்லை என்றால் அதில் விழுவதற்கு வாய்ப்பில்லை. 60 அடி பைப்புகளை இறக்குவதற்கு ரூ.18 ஆயிரம் செலவு ஆகிறது. ஏற்கனவே 600 அடி போட்டு தண்ணீர் வரவில்லை. இப்போது 60 அடி பைப் இறக்குவதால் ₹18 ஆயிரம் ெசலவாகும்.

போர்வெல் போட்டு தண்ணீர் வரவில்லை என்றால் ஏற்கனவே பேசிய பணத்தை குறைத்துக் கொண்டு கொடுப்பார்கள். மேலும் போர்வெல்லை மூட வேண்டாம் என்றும் சொல்வார்கள்; இரண்டு நாள் கழித்து தண்ணீர் ஊறுகிறதா என்று பார்த்து அதன்பிறகு நான் மூடிக்கொள்கிறேன் என்று கூறுவர். அந்த நிலத்துக்காரர் பின்பு வருகிற ஆபத்தை புரிந்து கொள்ளாமல் 18 ஆயிரம் கூடுதலாக செலவாகிறதை தான் பார்க்கின்றனர்.

 போர்வெல் வண்டிக்காரருக்கு அந்த போர் போடுவதன் மூலம் ரூ.5 ஆயிரம் தான் கிடைக்கும். தணணீர் வராவிட்டால், மணல் போட்டு மூட சொன்னால்,  அதற்கு பணம் தரமாட்டேன் என்று கூறுவதுடன், ஒரு கல்லை வைத்து மூடிவிடுவார் நில சொந்தக்காரர். பின்னர், கல்லும் காணாமல் போய்விடும். குழி அப்படியே இருக்கும். மணப்பாறை சம்பவம் நடந்து இருப்பதை பார்த்தால் 5 வருடத்திற்கு முன்னால், ஆழ்துளை கிணறு தோண்டியிருப்பார் என்று தெரிகிறது.  இது எவ்வளவு பெரிய கவனக்குறைவு. போர்வெல் போட்ட போது தண்ணீர் வரவில்லை என்ற வெறுப்பில் பின்விளைவுகளை பார்க்காமல்   தவறு செய்கின்றனர். எனவே அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளோம். போர்வெல் போட்டால் பைப் கண்டிப்பாக இறக்க வேண்டும் என்று ஒரு சட்டம் வர வேண்டும்;  ஆர்டர் எங்களிடம் கொடுத்து விட்டால் நாங்கள் ஏழை, பணக்காரர் என யாராக இருந்தாலும் பைப் இறக்க வேண்டாம் என்றால் உடனடியாக போலீசாருக்கு தகவல் ெகாடுத்து விடுவோம். அப்போது இடத்துக்காரர் பைப் இறக்க ஒப்புக்கொள்வார்.

தற்போது போர்வெல் போடுபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய வேண்டும்; இனிமேல் யார் போர்வெல் போடுகிறார்களோ அவர்களே தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகின்றனர். எங்களுடைய சார்பில் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். என்ன வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சென்னையில் 5 அங்குல பைப் இறக்குகிறோம் அதில் கை கூட உள்ளே போகாது, மணப்பாறை சம்பவத்தில் பைப் அமைக்காதது தான் காரணம். பைப் அமைக்காததால் அது நாளடைவில் புதைக்குழி போன்று ஆகிவிடுகிறது. அந்த குழந்தை மீட்கும் போது அவ்வப்போது, மண் விழுந்திருக்கும், பைப் அமைக்காததால் அந்த குழியின் அகலம் அதிகமானதாகிவிடும் என்பதால் 2 வயது குழந்தை கூட உள்ளே விழ வாய்ப்பு இருக்கிறது. மணப்பாறை சம்பவம்

நடந்து இருப்பதை பார்த்தால் 5 வருடத்திற்கு முன்னால், உரிமையாளர் ஆழ்துளை கிணறு தோண்டியிருப்பார் என்று தெரிகிறது. இது எவ்வளவு பெரிய கவனக்குறைவு.

Related Stories: