ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி

தண்டையார்பேட்டை:  வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சென்னை, புறநகர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒரு சில  வார்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை மற்றும் படுக்கை வசதி முறையாக இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மருத்துவமனையின் பழைய 8 மாடி கட்டிடத்தில் உள்ள வார்டுகளில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் உள்ளது.

இங்குள்ள மின்விசிறிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் காட்சிப்பொருளாக உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் புகார் அளித்தால், “இஷ்டம் இருந்தால் சிகிச்சை பெற்று செல்லுங்கள், இல்லை என்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற செல்லுங்கள்” என மிரட்டும் தொணியில் பேசுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த மருத்துமனையில் அடிப்படை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: