திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் எச்.ராஜா

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது இல்லத் திருமண விழாவில் பங்கேற்க எச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இளைய மகளுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. அதற்கான  திருமண அழைப்பிதழை அனைத்து கட்சித்தலைவர்கள், கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்களுக்கு வழங்கிய  நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட முக்கிய திரையுலக பிரபலங்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

இந்த நிலையில், இன்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். முன்னதாக, மு.க.ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை போற்றி கவுரவித்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இல்லத் திருமண விழாவிற்காக அழைப்பு விடுத்ததாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகரைச் சேர்ந்த சட்ரக் என்பவருக்கு நீரிழிவு நோயால் இடதுகால் அகற்றப்பட்ட நிலையில், அவரின் கோரிக்கையை ஏற்று செயற்கை கால் வழங்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது. அதேபோல், திருவிக நகரை சேர்ந்த திமுக உறுப்பினர் சுந்தரமூர்த்தியின் மகன் நவீன் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கான கல்வி உதவித்தொகையை அறிவாலயத்தில் ஸ்டாலின் வழங்கியதாகவும் திமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: