இந்தியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. செப்டம்பரில் 7.2 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் அக்டோபரில் 1.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் 48 மாவட்டங்களில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏராளமானோர் அந்த காலகட்டத்தில் பணி இழந்தனர். கடந்த 2017-2018 நிதி ஆண்டில், நாட்டில் ஒட்டுமொத்த வேலையின்மை சதவீதம் 6.1 ஆக உயர்ந்தது இது, நகரங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமங்களில் 5.3 சதவீதமாகவும் இருந்தது.

இந்தியா முழுவதும் உள்ள வேலையில்லாத ஆண்கள் சதவீதம் 6.2 ஆகவும்,  5.7 சதவீதமாக உயர்ந்திருந்து.  தற்போது தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத உயர்வு என்பது குறிப்பி்டத்தக்கது. இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல் நாட்டின் முக்கிய 8 தொழில்துறைகளில் உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பரில் நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்துறை உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கச்சா எண்ணெய், எரிவாயு, சிமென்ட், மின்சாரம், உரம் உள்ளிட்ட முக்கிய 8 தொழில்துறைகளின் உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உரம் தவிர்த்த ஏனைய 7 தொழில்களிலுமே சரிவு கண்டுள்ளன. 8 தொழில் துறைகளும் ஒட்டுமொத்தமாக 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. உரம் உற்பத்தி மட்டுமே 5.4 என்ற அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. அதிகபட்சமாக நிலக்கரி உற்பத்தி 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார தேக்கநிலை சீராகியும் தொழில்துறை மீண்டும் வேகமெடுத்தால் மட்டுமே 8 அடிப்படை தொழில் உற்பத்தியும் அதிகரிக்கும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: