திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களுடன் அமீரக திமுக சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய்: திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் பூண்டி கலைவாணன் அமீரகம் வந்துள்ளார். அமீரக திமுக சார்பில் S.S. மீரான் தலைமையில் பாவை அனிபா முன்னிலையில் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் பூண்டி கலைவாணன் அவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பு துபாய் லேன்மார்க் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

சந்திப்பு விழாவில் சிவகங்கை மகேந்திரன், அபுதாபி ஜாகிர், இர்ஷாத் முஸ்தபா அசார்,  செந்தில் பாலா, செந்தில் பிரபு, தளபதி தமீஸ், இழ முருகன், உதயநிதி பாலா, ஹரிஹரன், மணிமொழியன், மணிவேல், வெங்கட் தாரிக் ரஹீம் மற்றும் திரலாக அமீரக திமுகவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: