கடமைக்காக சீரமைப்பு இரண்டாக பிளந்த காவிரி பாலம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்

திருச்சி: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் சீரமைத்து ஓராண்டுக்கூட முடியாத நிலையில் திருச்சி காவிரி பாலம் இரண்டாக பிளந்தது.

திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக சத்திரம் பஸ் நிலையம்-ஸ்ரீரங்கம் பகுதியை இணைக்கும் காவிரி பாலம் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இரண்டாக பிரித்து ஓடும் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள இப்பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்பாலத்தின் பக்கவாட்டில் கைப்பிடி சுவர் இடைவெளி வழியே காவிரி ஆற்றின் அழகை ரசித்தப்படியே பஸ் பயணம், வாகனப் பயணம் செய்வது அலாதியான இன்பம் தரும். ஆனால் இப்பாலம் சீரமைப்பதாக கூறி கைப்பிடி சுவர்கள் இடிக்கப்பட்டு, காவிரி ஆற்றின் அழகை ரசிக்க முடியாதவாறு முழுமையாக அடைத்து கட்டப்பட்டது. இது திருச்சி மக்களின் கடும் கண்டனத்துக்குள்ளானது. இதையடுத்து, மீண்டும் கைப்பிடி சுவரில் இடைவெளிவிட்டு கட்டப்பட்டது. பல மாதங்களாக இப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவஸ்த்தையடைந்தனர்.

இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, மீண்டும் பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சீரமைக்கப்பட்ட பல இடங்களிலும் கான்கிரீட் கலவைகள் உடைந்து, தார்பூச்சுக்கள் பெயர்ந்து வருகின்றன. பாலத்தூண்களுக்கு இடையே இணைப்பு பகுதிகளில் கான்கிரீட் கலவை உடைந்து, பாலத்தை தாங்கி நிற்கும் கம்பிகள் தான் தற்போது வெளியே தெரிகின்றன.இது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருச்சி வாழ் மக்களை அதிருப்தியுடன் அதிர்ச்சியடையவும் செய்துள்ளது. சீரமைப்பு என்ற பெயரில் பல மாதங்களாக பணி நடந்தும் பயனில்லை. சீரமைப்பு பணி முடிந்து சில மாதங்களிலேயே பாலம் பெயர்ந்து காணப்படுவது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக பாலம் சீரமைப்பில் ஊழல் நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தை முறையாக முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்பாலம் சீரமைப்பதாக கூறி கைப்பிடி சுவர்கள் இடிக்கப்பட்டு, காவிரி ஆற்றின் அழகை ரசிக்க முடியாதவாறு முழுமையாக அடைத்து கட்டப்பட்டது. இது திருச்சி மக்களின் கடும் கண்டனத்துக்குள்ளானது

Related Stories: