×

ஹாலோவின் தினத்தையொட்டி நாசா வெளியிட்டுள்ள சூரியனின் புகைப்படம்: இணையத்தில் வைரல்

ஹாலோவின் தினத்தையொட்டி நாசா வெளியிட்டுள்ள சூரியனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. தீய சக்திகளை விரட்டும் ஹாலோவின் திருவிழா அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அடுத்தவர்களை பயமுறுத்தும்விதமாக பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விளக்குகள் கொண்டு மக்கள் அலங்கரிப்பார்கள்.

இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் சுவாரஸ்ய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனும்கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டது என இப்புகைப்படம் குறித்து நாசா குறும்பாக குறிப்பிட்டுள்ளது. இப்புகைப்படம் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : NASA , Halloween Day, NASA, sun, photo, viral
× RELATED கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க...