குழந்தைகளை மீட்கும் கருவி கண்டுபிடித்தால் 5 லட்சம் பரிசு: அரசு செயலாளர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள முகநூல் பதிவு: நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், 4 நாட்களுக்கு பிறகு சடலமாக நேற்று அதிகாலை மீட்கப்பட்டான். அவனை உயிருடன் மீட்க 200க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு வீரர்கள், நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் பலன் அளிக்கவில்லை.

இதற்கு, நவீன கருவிகள் அரசிடம் இல்லை என்ற குற்றச்சாட்டே எழுந்துள்ளது.இந்நிலையில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ்பாபு நேற்று அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க நவீன கருவி கண்டுபிடித்தால் 5 லட்சம் பரிசு அளிக்கப்படும்.

Related Stories: