குமரி கடல் பகுதியில் உள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : குமரி கடல் பகுதியில் உள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச் சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மேலும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உட்பட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 7 செ.மீ. மழையும் மாமல்லபுரத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.அதே சமயம் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் 30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: