சிறந்த படைப்புகளுக்காக கல்லூரி மாணவர்களுக்கு தேசிய தண்ணீர் விருது: துணைவேந்தர், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை

சென்னை: தேசிய தண்ணீர் விருதுக்கு விண்ணப்பிக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி சுற்றிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:தண்ணீர் நம் வாழ்வுக்காக முக்கிய ஆதாரங்களின் ஒன்று. வேளாண்துறையில் விளைச்சல் அதிகரிப்பின் தேவை, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கலால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பருவகாலங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இந்நிலையில் தண்ணீர் வளத்தை காப்பதற்கு நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், தண்ணீர் வளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே தேசிய நீர்வளத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மாணவர்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் நீர்வளத்துறை தேசிய தண்ணீர் விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் நீர்வளத்துறை தேசிய தண்ணீர் விருதுகள் 2019க்கு, 15 பிரிவுகளின்கீழ் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பு, சிக்கனம் தொடர்பான சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், விதிகள் www.mowr.gov.in, www.cgwb.gov.in ஆகிய இணையதளங்களில் உள்ளது. இவ்வாறு யுஜிசி செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: