சென்னையில் அமைக்கப்படும் கேளிக்கை பூங்காவுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு : முதலீடுகளை அதிகரிக்க அரசு திட்டம்

சென்னை: சென்னையில் அமைக்கப்படும் கேளிக்கை பூங்காவுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கை தமிழக அரசு அளிக்கிறது. இதன்மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியும் எனவும் நம்புகிறது. தமிழக அரசு கேளிக்கை பூங்கா நிறுவனத்திற்கு வரிவிலக்கு அளிக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வரும் நவம்பரில் இருந்து இத்திட்டம் துவங்குகிறது. இதன்மூலம் அதிக முதலீட்டை கேளிக்கை பூங்காக்களுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், 2019 நவம்பர்-1 முதல் 2024 அக்டோபர் 31 வரை, சம்பந்தப்பட்ட நிறுவனம் பொழுதுபோக்கு வரி செலுத்த வேண்டியதில்லை எனக்கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பங்குச்சந்தையிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நிறுவனங்களுக்கு வரி அதிகமாக வருகிறது எனக்கூறுகின்றனர். எனவே இதை தடுக்கும் வகையில் தற்போது கேளிக்கை பூங்கா ஒன்றுக்கு வரி விலக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொழில் வரி, ஜிஎஸ்டி ேபான்ற ஏராளமான வரிகளை செலுத்துவதால், அவர்களால் லாபகரமான முறையில் இத்தொழிலை செய்ய முடியாது. தற்போது வரிவிலக்கு அளிப்பதன் மூலம் அதிக முதலீடுகளை பெறமுடியும்’’ என்றார்.

Related Stories: