அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து சிறுவனை மீட்க போராடி வருகிறோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 70 அடியில் குழந்தை சிக்கியிருந்தாலும் மூச்சு விடுவதை கண்காணிக்க முடிந்தது என்றும், ஆனால் காலை 5.30 மணிக்கு பின் உடல்நிலையை கணிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருவதாக தெரிவித்த அவர், கண்காணிப்பு கேமரா மூலம் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டாலும், குழந்தையை பத்திரமாக மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்தது.

Related Stories: