மீண்டு வா சுஜித் : குழந்தையை மீட்கக்கோரி ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveSujith

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கக்கோரி ட்விட்டரில் #SaveSujith என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்கக்கோரி பல்வேறு தரப்பினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர்.

குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்கிறது.  சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைக்கு சுவாசிக்க தொடர்ச்சியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழந்த குழந்தையை மீட்க வேண்டும் என்று ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்

குழந்தை பத்திரமாக உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்றும், மீண்டு வா சுஜித் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட் செய்துள்ளார்.

இயக்குனர் சேரன்

நெஞ்சம் பதபதைக்கிறது விரைவில் மீட்கப்பட வேண்டும் இறைவா! என்று திரைப்பட இயக்குனர் சேரன் ட்விட் செய்துள்ளார்.

இயக்குனர் கோபி நயினார்

ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது என்று அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் பு​​திய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை கோபி நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும் என்றும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

Related Stories: