நுங்கம்பாக்கம் திரைப்படத்துக்கு தடை கோரி மாணவர் ராம்குமார் தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: நுங்கம்பாக்கம் திரைப்படத்துக்கு தடை கோரி மாணவர் ராம்குமார் தந்தை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார். ராம்குமார் மரணம் குறித்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், நுங்கம்பாக்கம் படத்தை வெளியிட தடை கோரி அவரது தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும் என்றும், உண்மை வெளிவராது என்றும் ராம்குமாரின் தந்தை பரமசிவன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: