நாகர்கோவில்: திருவனந்தபுரம் தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு ஒரு முன்பதிவில்லா சிறப்பு ரயில் தாம்பரம் முதல் கொச்சுவேளி இடையே வரும் 26ம் தேதி இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 06031 தாம்பரம்- கொச்சுவேளி முன்பதிவு இல்லாத அந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 26ம் தேதி காலை 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு கொச்சுவேளி சென்றடையும். 2ம் வகுப்பு ெசயர் கார் 10, பொது 2ம் வகுப்பு பெட்டிகள் 9ம் இந்த ரயிலில் இடம் பெற்றிருக்கும்.
