தேவர் ஜெயந்தியை யொட்டி பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்று துணை முதல்வர் விழா குழுவிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து தங்க கவசத்தை பெற்று விழா குழுவிடம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஒப்படைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு  அணிவிப்பதற்காக 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அதிமுக சார்பில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இதை பாங்க் ஆப் இந்தியா மதுரை கிளையில் பாதுகாப்பாக வைத்திருந்திருந்து ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி திருவிழாவின் போது அதிமுக பொருளாளர் மூலம் விழாக் குழுவினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த வகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் வங்கியில் இருந்து கவசத்தை பெற்று விழா குழுவிடம் ஒப்படைத்தார். இந்த தங்க கவசம் பசும்பொனில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு விழா முடிந்ததும் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும். மேலும் விழா பாதுகாப்புகள் குறித்தும் துணை முதல்வர் பார்வையிட்டார்.

Related Stories: