சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா உள்ளிட்ட 9 பேர் களத்தில் உள்ளனர்.