பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தூள்,  காதல் சடுகுடு, சண்டை, வீரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்திருப்பவர் பரவை முனியம்மா (76). மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்தவர்.  விக்ரம் நடித்த தூள் படத்தில் ‘சிங்கம்போல நடந்து வரான் செல்ல பேராண்டி..  என்ற பாடல் மூலம் பிரபலம் ஆனார். பின்னர் பட வாய்ப்பு குறைந்ததால் வறுமையில்  வாடினார். அவருக்கு அரசு சார்பில் ₹6 லட்சம் வைப்பு நிதி அளித்து  அதிலிருந்து மாதம் 6 ஆயிரம் வருமானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரவை முனியம்மா வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்  அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில், தான் இறந்தபிறகு தனக்கு  மாதம்தோறும் வழங்கும் 6 ஆயிரம் ரூபாயை தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு வழங்க  வேண்டும் என கேட்டிருக்கிறார்.

Related Stories: