பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை : ரவுடி கைது

பூந்தமல்லி: குன்றத்தூரை சேர்ந்தவர் நித்திராஜ் (42). இவர், ஒரு கொலை வழக்கில் 8 ஆண்டுகள் தண்டனை பெற்று, நன்னடத்தை விதிகளின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, மதுரவாயலில் இருந்து ஷேர் ஆட்டோவில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

Advertising
Advertising

அப்போது, அந்த ஆட்டோவில் வந்த வானகரத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் அவனிடம் நைசாக பேசி ஏமாற்றி,  பூந்தமல்லி குமணன்சாவடி பகுதிக்கு அழைத்து சென்று, அங்குள்ள ஒரு தனியார் குடோனின் பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அந்த ரவுடியை மடக்கி பிடித்து உதைத்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நித்திராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: