வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்

சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில்  நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனும் கனமழை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே மழையால் பல்வேறு இடங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருகிறது. இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பருவமழை எதிர்க்கொள்வது குறித்தும், மழையால் பள்ளி மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பொதுத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பாதுகாப்பு முகாம் அமைப்பது, தண்ணீர் தேங்கினால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்றுவது ,மருத்துவ முகாம் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

தலைமை செயலகத்தில் நடைபெறும்  ஆலோசனை கூட்டத்தில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர் வேலுமணி,ஜெயக்குமார் விஜயபாஸ்கர்,ஆர் பி உதயகுமார் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் வடகிழக்கு  பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட தாழ்வான பகுதிகள் , மீட்புப்பணி குறித்த விவரம் , வெள்ளம் குறித்த கண்காணிப்பு என பல்வேறு விஷயங்கள் விரிவாக பேசப்படுகின்றது. 

Related Stories: