×

தென் மாவட்டங்களில் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : districts ,Southern ,district administration , Southern Districts, Heavy Rain, Precautions, District Collectors, Chief Minister, Directive
× RELATED தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு