தகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது புகார்

சென்னை: தகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் பகுதி நேர ஆசிரியர் நியமனம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளது என்று கலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது குறித்து தெளிவான விளக்கம் ஏதும் கொடுக்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் மவுனமாக இருக்கிறது. அதனால் இந்த பணி நியமன தெரிவுப் பட்டியலில் குளறுபடிகள் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கலை ஆசிரியர்கள் தற்போது புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்றும், அவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணியாற்றுகின்றனர் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வ ழங்க மத்திய அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்கிறது என்று தெளிவாக எடுத்துக்கூறியதன் பேரில்  பகுதி நேர ஆசிரியர்கள் ஒப்புதல் கடிதம் எழுதிக் கொடுத்துதான் பணியாற்றுகின்றனர், அதனால் வெளி ஆட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மாவட்டங்களில் பயிற்சி முடிக்காத 67 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல பல்வேறு மாவட்டங்களில் ஓவியம், தையல், இசை பாடப்பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெறாத தகுதியில்லாத ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளனர். அவர்களுக்கு சான்று சரிபார்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனாலும் 2012ம் ஆண்டில் பலர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அப்படி பணி நியமனம் செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி என்ற அடிப்படை தகுதியில்லாதவர்கள் எப்படி நியமனம் செய்யப்பட்டனர் என்பதற்கு சரியான விளக்கம் பெற வேண்டும்.

Related Stories: