அரசியல் பரபரப்புக்காக சீமான் பேசுவது 7 தமிழர்கள் விடுதலையில் பின்னடைவை ஏற்படுத்தும்: கி.வீரமணி கருத்து

சென்னை:  அமெரிக்க மனிதநேயர் சங்கம் சார்பில், ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. சென்னை திரும்பிய அவருக்கு பாராட்டு விழா  வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடந்தது. திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர்  சுப.வீரபாண்டியன் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்கு குரல் கொடுக்கிற அரசியல் மனப்பான்மை கொண்ட அறம் சார்ந்த  சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய மிகப் பெரிய அமைப்பு. இந்த விருது எனக்கான விருது அல்ல, பெரியாரின் கொள்கைளுக்கான விருது.

 ராஜிவ் காந்தி கொலை குறித்து சீமானின் சர்ச்சை பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. விடுதலைப்புலிகளே எந்த ஒரு இடத்திலும் நாங்கள்தான் அவரை கொன்றோம் என்று சொல்லவில்லை.  7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட கூடிய  நிலையில், இவரது பேச்சு அவர்கள் விடுதலையில் பின்னடைவை ஏற்படுத்தும். அவர்களை விடுவிக்க கூடாது என்பதில் சீமான் உறுதியாக உள்ளார்.  விடுதலைப்புலிகளுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். அவர்களது படத்தை வைத்து  அரசியல் செய்கிறவர். 

Related Stories: