×

நண்பனைப்போல் பழகும் டால்ஃபின்கள்!

நீரில் வாழும் ஒரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த உயிரினம் டால்ஃபின். இது திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தது.  பதினேழு வகையான பேரினங்களில், சுமார் நாற்பது வகையான டால்ஃபின் இனங்கள் உள்ளன. இவற்றின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாக, விளிம்பில் சுழியுடையதாக இருக்கின்றது. இவை 1.2 மீட்டரிலிருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையிலிருந்து 10 டன் எடை வரை உள்ளன.

டால்ஃபின்கள் ஊனுண்ணிகள். இவை மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுகளின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். அறிவுக்கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்று. இவை மனிதர்களுடன் மிகவும் நன்கு பழகுகின்றன. மனிதர்களோடு நண்பனைப் போல பழகக்கூடிய டால்ஃபின்களைக் கொண்டு சிங்கப்பூர் துபாய் போன்ற இடங்களில் சர்க்கஸ் ஷோ நடத்தப்படுகிறது.

டால்ஃபின்கள் வேகமாக நீச்சலடிக்கும் வண்ணம் நெறிப்படுத்தப்பட்ட நீள் வடிவ உடலைக் கொண்டிருக்கின்றன. வால் பிரிவில் உள்ள பெக்டோரல் துடுப்புகள் திசை கட்டுப்பாடுத் திறனையும் வால் துடுப்பு முன்செலுத்தும் திறனையும் கொண்டிருக்கும். நீந்தும்போது முதுகுத் துடுப்பு ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. இனங்கள் வேறுபட்டவையாக இருப்பினும் பெரும்பாலும் கோடுகளோடு சாம்பல் வண்ணங்களைக் கொண்டவையாக உள்ளன. சில இனங்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும்.

டால்ஃபின்கள் தங்கள் தலைக்கு மேல் உள்ள ஒரு உறிஞ்சும் துளை மூலம் மூச்சுவிடும். அதன் மூச்சுக் குழல் மூளைக்கு முன்புறமாக உள்ளது.
பெரும்பாலான டால்ஃபின்கள் நீரின் அடியில் மற்றும் வெளியே இருபகுதியிலும் தீவிர கண்பார்வை கொண்டவை. அவை மனிதனை விட பத்து மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வெண்களைக் கேட்க முடியும். நீருக்கு அடியிலும் கேட்கும் திறனை பெற அவற்றின் பிரத்தியேகமான கீழ்த் தாடை எலும்பு ஒரு கொழுப்பு நிறைந்த குழி வழியாக நடுச்செவிக்கு ஒலியைக் கடத்துகிறது.

Tags : Dolphins like a friend
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...