துர்கா பூஜையில் பெரும் அவமதிப்பு: மேற்கு வங்க கவர்னர் குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ரெட் ரோடு பகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜெக்தீப் தன்கர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி நடைபெற்ற மேடையின் மூலையில் கவர்னர் தன்கருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததால் அவரால் நிகழ்ச்சியை சரியாக பார்க்க  முடியவில்லை என கூறப்படுகிறது.

 இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ஜெக்தீப் தன்கர் துர்கா பூஜை நிகழ்ச்சியின்போது தான் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: வெள்ளிகிழமை நடைபெற்ற  துர்கா பூஜை நிகழ்ச்சியில் நான் அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தேன். இதனால் மனவருத்தம் அடைந்துடன் அதில் இருந்து மீள எனக்கு 3 தினங்கள் வரை ஆனது. இந்த அவமானம் எனக்கு ஏற்பட்டது அல்ல. ஒட்டு மொத்த மாநில  மக்களுக்கு ஏற்பட்டதாக கருதுகிறேன். நான் மேற்கு வங்க மாநில மக்களின் சேவகன். அரசியல்அமைப்பு ரீதியிலான கடைமையை செய்ய எந்த சக்தியும் என்னை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: