குழந்தைகளை ஆபாச படம் எடுத்த விவகாரம் 2 பேர் வீட்டில் சோதனை : சென்னையில் சிபிஐ அதிரடி

சென்னை: ஜெர்மனியில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த 2 பேர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கிற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் உலகம் முழுவதும் பரப்பியதாக அந்நாட்டு காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இருந்ததை தொடர்ந்து, வாட்ஸ் அப் குழுவில் உள்ள 482 நபர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மோசடிக்கு சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.மேலும் இந்த வாட்ஸ்அப் குழுவில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் உறுப்பினர்களாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து ஜெர்மன் போலீசார் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் 7 பேர் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னை, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சென்னை சேலையூர் பிருந்தாவனம் கார்டன் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல் சென்னை இம்ரான் 2வது தெருவை சேர்ந்த கவுசிகா என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இருவர் வீடுகளிலும் சிறுமிகள் பாலியல்  தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய பல முக்கிய ஆவணங்களை  பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் ெவளியாகி உள்ளது.

Related Stories: