வேல்ஸ் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதல் கொலை வெறித்தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகள் சரண்

சென்னை: பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வரும் இரண்டு மாணவர்கள் நடு ரோட்டில் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொண்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரண்  அடைந்தனர்.  பல்லாவரம் ரேடியல் சாலை அருகே கடந்த 10ம் தேதி வேல்ஸ் கல்லூரி மாணவர் அஸ்வின் (24) என்பவரை, அதே கல்லூரியில் சட்டம் படித்து வரும் மற்றொரு மாணவரான கார்த்திக் (24) என்பவர், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்க இருந்த வேலையில், இவ்வாறு மாணவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான சாலையில் கத்தியால் வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  மேலும் இந்த கொலை வெறித்தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கோகுல்ராஜ் என்பவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் 294(பி), 323, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து,  தப்பியோடிய நபர்களை தேடி வந்தனர். இதில் கார்த்திக்கின்  நண்பர் ஜெகதீஸ் என்பவரை சம்பவம் நடந்த அன்று இரவு போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கார்த்திக் கணேஷ் மற்றும் பொன்செலிந்துரை ஆகியோர் பொன்னேரி  நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ‘கடந்த இரண்டு மாதத்திற்கு முன் வகுப்பில் பேப்பர் ராக்கெட் விடும் போது, ஒருவருக்கொருவர் பகை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு குழுக்களாக பிரிந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு  வந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக அஸ்வினை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கத்தியால் சரமாரியாக கார்த்திக் வெட்டியது’ தெரிய வந்தது.

Related Stories: