பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாப்பது எப்படி?: மாநகராட்சி, தீயணைப்பு துறை வீரர்கள் செய்முறை விளக்கம்

சென்னை: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்க நிகழ்ச்சி, கோயம்பேட்டில் நேற்று நடைபெற்றது.சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை இணைந்து கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில்  பேரிடர் சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக  பொதுமக்களுக்கு  செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் பி.என். ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பேரிடர் குறைப்பு தினத்தை அனுசரித்து பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 மக்கள் அதிகமாக கூடும் இடங்களான  மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில், மாதிரி செய்முறை விளக்கம் செய்து காண்பித்து மக்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கண்டறிந்து, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மண்டல அலுவலர் பரந்தாமன், மண்டல செற்பொறியாளர் சின்னதுரை, தீயணைப்புதுறை அதிகாரிகள், மாநகராட்சி அலுலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>