தீபாவளியை முன்னிட்டு சமூக வலைதள பெயா்களில் பட்டாசு விற்பனை: இளைஞா்கள், சிறுவா்கள் மத்தியில் வரவேற்பு

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு சமூகவலைதள பெயா்களில் விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 16 நாட்களே உள்ள  நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி என்பது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது.

இந்நிலையில், பட்டாசு தயாரிப்பாளர்கள் வருடம் வருடம் பட்டாசுகளுக்கு விதவிதமான பெயர்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன்படி,  இந்தாண்டு சமூக வலைதள பெயா்களில் வந்துள்ள பட்டாசுகளின் பெயர்கள் வரவேற்பை பெற்றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக ஸ்கைப், வாட்ஸ் ஆர்ப், டிவிட்டர், ஜியோ வீல், ஆங்கிரி பர்ட்ஸ் பட்டாசுகளை இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாங்கி  செல்கின்றனர். மேலும், இந்த ஆண்டு சிறுவா்களுக்கு வித விதமான துப்பாக்கி வகைளும் விற்பனைக்கு வந்துள்ளது. இவையும் பெரும் வரவேற்பை  பெற்றுதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: