குழந்தைகள் நல தினத்தையொட்டி ஸ்டான்லி மருத்துவமனையில் விழிப்புணர்வு மனித சங்கிலி

தண்டையார்பேட்டை: உலகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி குழந்தைகள் நல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டிற்கு 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000 த்திற்கு 39 ஆக இருந்தது.தொற்றுநோய், ஊட்டச்சத்து குறைவு, விபத்து மற்றும் காயங்கள் போன்றவை குழந்தைகள் இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளன. குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக தேசிய நலத்திட்டம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தாய் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. குழந்தைகள் நலனுக்காகவே பிரேம் எனும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு தாயின் ஒரு அங்கமாக விளங்குகிறது. இதில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தல், தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டு கொள்ளுதல், குழந்தைகள் நோய்கள் குறித்து ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை அழைத்து வருவதன் மூலம் குழந்தைகளின் இறப்பை தடுக்கலாம் என்ற விழிப்புணர்கள் தாய்மார்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் அதற்கான அறிகுறிகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் போன்ற பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்திமலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் ரவிச்சந்திரன், அரவிந்த், கணேஷ், செந்தில்குமார் உட்பட மருத்துவர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories: