கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணி தவறவிட்ட பர்சை ஒப்படைத்த சிறுவர்கள்

*வனத்துறை அலுவலர்கள் பாராட்டு

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணி தவற விட்ட மணிப்பர்சை வனத்துறை அலுவலர்களிடம் சிறுவர்கள் ஒப்படைத்தனர். பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கும்பக்கரை அருவிக்கு வந்து செல்கின்றனர். தற்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளளனர். இதனால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து திரும்பி செல்கின்றனர்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன்கள் பாஸ்கரசேதுபதி(11) மற்றும் பிரதீப்சேதுபதி(8). இவர்கள் இருவரும் நேற்று தந்தை பாண்டியனுடன் கும்பக்கரை அருவிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது சாலையில் மணிப்பர்ஸ் ஒன்று கிடப்பது கண்டு அதனை எடுத்து அங்கிருந்தவர்களிடம் கேட்டு யாரும் தங்களது கிடையாது என்றதால், அங்கிருந்த வனத்துறை வனக்காவலர் யேசுமணியிடம் ஒப்படைத்தனர். அவர் சிறுவர்களை பாராட்டியதுடன் இந்த மணிப்பர்ஸூக்கு சொந்தக்காரர்கள் அதன் அடையாளத்தை கூறி தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர்.

Related Stories: