சென்னை:சமீபத்தில் கலைஞானத்துக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. கலைஞானம் வாடகை வீட்டில் வசிப்பது பற்றி மேடையில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். பின்னர் பேசிய ரஜினிகாந்த், என்னை ஹீரோவாக்கிய கலைஞானத்துக்கு நானே வீடு வாங்கி தருகிறேன் என்று அறிவித்தார். அதன்படி, விருகம்பாக்கம் பகுதியில் 3 படுக்கை அறை வசதியுடன் 1320 சதுரஅடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீடு வாங்கி கலைஞானத்துக்கு அளித்தார் ரஜினி. அதில் கலைஞானம் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் குடியேறினார். அவரது வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த், கிரகப்பிரவேசத்தில் கலந்துகொண்டார்.