காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. சினிமாவில் தயாரிப்பு நிர்வாகியாக பல படங்களில் பணியாற்றினார். பின்னர் நடிகர்  வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தார். நான் கடவுள், நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். இந்நிலையில், கேரளாவின் குமுளி அருகே வண்டிப்பெரியாரில் நடந்த  படப்பிடிப்பில் இவர் பங்கேற்றார். நேற்றுமுன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்து விட்டார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவர் இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

Related Stories: