பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து, இன்று அரசுபள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

சென்னை: விஜயதசமியையொட்டி அரசுபள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் அங்கன்வாடி மையங்களில் இன்றைய தினம் பள்ளியை திறந்து வைத்து 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கையானது தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக LKG, UKG வகுப்புகள் ஆங்கில வழிமுறையில் தொடர்புடைய இந்த திட்டமானது தமிழகத்தில் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் இன்றைய தினம், அதன் ஒருபகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான குழந்தைகள் தங்களுடைய பள்ளி படிப்பை தொடங்கியுள்ளனர். அதற்கான சேர்க்கையும் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த பள்ளி மாணவர்களை வரவேற்கும் வகையில் அப்பள்ளியில் இருக்கக்கூடிய பல்வேறு அலங்கார பொருட்கள், சிறு குழந்தைகள் விரும்பக்கூடிய அழகு பொருட்கள் உட்பட பல்வேறு விதமான வரவேற்புகள் அடங்கியுள்ளன. பெற்றோர்களும் ஆர்வமாக வந்து தங்களுடைய குழந்தைகளை இன்றைய தினம் படிப்பு சேர்க்கைக்காக அனுமதித்துள்ளனர். இதை தொடர்ந்து அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்ததாவது, தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்து கொடுத்திருப்பதாகவும், அவ்வாறு முதல் முறையாக பள்ளி படிப்பை தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு எந்தவொரு அச்சமும் இல்லாமல் அவர்களை தங்கள் தாய் தந்தையரை போல வரவேற்று அவர்களுக்கான பள்ளிப்படிப்பை இன்றைய தினம் தொடங்கியிருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: