கடவுளின் கிருபையால் தொழில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது: ஜான் ஜேக்கப்

திருநெல்வேலி மாவட்டம் வேதப்பபுரத்தை சேர்ந்த பவுல் மற்றும் ஞானசெல்வம் தம்பதிக்கு 4 பிள்ளைகள். இதில் இரண்டாவது மகனாக பிறந்தவர் ஜான் ஜேக்கப். இவர் தனது பெற்றோருடன் தானே மாப்பே பகுதியில் வசித்து வருகிறார். தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து வந்த அவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தானே கோட்பந்தர் பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் மெக்கானிக் வேலைக்கு சேர்ந்தார். 5 வருடம் வேலை பார்த்த அவர், வேலையில் உள்ள பல்வேறு நுணுக்கங்கள் தெரிந்துக் கொண்டார். வேலை பார்த்து கொண்டிருந்த நேரத்தில் கார் ஓட்டுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.இந்த சூழ்நிலையில் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. சவுதி அரேபியா நாட்டுக்கு சென்று ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். 2 வருடம் வேலை பார்த்து வந்த பின்னர் மும்பைக்கு வந்தார்.

மும்பையில் சில காலம் கேப் ஓட்டு னராக பணி புரிந்த அவருக்கு பல நல்ல வாடிக்கையாளர்கள் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டு ஆசை ஏற்பட்டது. பின்னர் சொந்தமாக வாகனத்தை வாங்கி பி.ஜி. டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற பெயரில் தொழிலை தொடங்கினார்.முதலில் ஒரு காரை வாங்கி அதனை வாடகைக்கு விட்டிருந்தார். தொடர்ந்து கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று 4 வாகனங்கள் சொந்தமான வாங்கியுள்ளார். அதனுடன் 17 வண்டி வாடகைக்கு வாங்கி அதனை தனியார் கம்பெனிக்கு காண்டிராக்டில் கொடுத்துள்ளார். வாடகைக்கு வாகனம் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை செய்து வருவதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இவரை அனுகி வருகின்றனர். இந்த வளர்ச்சிக்கு குடும்ப உறவினர்கள் அனைவரும் மிகவும் உருதுணையாக இருந்து வருகின்றனர். இதனால் ஜான் ஜேக்கப் எந்த திட்டம் எடுத்தாலும் அதில் சிறப்பாக செயல் பட்டு வெற்றி காணுகிறார். கடவுள் கிருபையால் தொழில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என கூறும் அவர், தானே பகுதியில் பி.ஜி டூர்ஸ் டிராவல்ஸ் நிறுவனம் பிரபலமாக திகழ்கிறது.

Related Stories: