கரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி

குளித்தலை: கரூர் அருகே மர்மகாய்ச்சலுக்கு   அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் நேற்று இறந்தன.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆதனூரை சேர்ந்தவர்  செல்வகுமார். பொக்லைன் டிரைவர்.  இவரது மகள் ரசிகாஜாய் (3). சிறுமிக்கு கடந்த 1ம் தேதி முதல் மர்மகாய்ச்சல் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்தாள். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தாள். இதேபோல் தோகைமலை அடுத்த குன்னா கவுண்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் ரித்தீஷ் (4).  சிறுவனுக்கு கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்தான். நேற்று ரித்தீஸ்  சிகிச்சை பலனின்றி இறந்தான். தோகைமலையில் ஒரேநாளில் இரண்டு குழந்தைகள் மர்மகாய்ச்சலுக்கு இறந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன்  உள்ளனர்.

4 பேருக்கு டெங்கு பாதிப்பு:  ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (42), விவசாயி. கடந்த ஒரு வாரமாக மாரிமுத்து, அவரது மனைவி ராஜேஸ்வரி (36), மகள்கள்  சுஷ்மிதா (15), ராஸ்னிகா (11) ஆகிய 4 பேருக்கும் காய்ச்சல் இருந்தது. ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும், மேல் சிகிச்சைக்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: