மாநிலம் முழுவதும் 11 ஆர்டிஓக்கள் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் 11 துணை ஆட்சியர்கள் (ஆர்டிஓ) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக உள்ள லட்சுமி பிரியா, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வருவாய்  கோட்டாட்சியராகவும், தேனி மாவட்டம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராகவும், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கணேஷ், வேலூர்  வருவாய் கோட்டாட்சியராகவும், சென்னை(தெற்கு) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் காயத்திரி சுப்பிரமணி, சென்னை(தெற்கு) கிண்டி வருவாய் கோட்டாட்சியராகவும், சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெகதீஸ்வரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி துணை ஆட்சியிர்(பயிற்சி), கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் வருவாய் கேட்டாட்சியராகவும், திருவள்ளூர் துணை ஆட்சியர் (பயிற்சி), சவுந்தர்யா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராகவும், கடலூர்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்து மாதவன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக துணை ஆட்சியராகவும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் பானுகோபன்,  விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: