சென்னை: கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு கட்டிடம் கட்ட 10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் 2019 ஜூலை 8ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண்: 110ன்கீழ் கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:கல்லூரிக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டு 54 ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் 9, 10ம் தளங்களில் இயங்கி வந்தது. அதே போல் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககம் சைதாப்பேட்ைட பி.எட் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.