வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க கான்ட்ராக்டர்களுக்கு ‘செக்’

* புகைப்படம் எடுத்து அனுப்ப பொதுப்பணித்துறை உத்தரவு

* 45%  கமிஷன் கொடுத்தால் வேலை தரமாக இருக்குமா என கேள்வி

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செய்யாமல் அலட்சியம் காட்டும் கான்ட்ராக்டர்களுக்கு பொதுப்பணித்துறை ‘செக்’ வைத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 9 பணிக்கு 1.85 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 10 பணிக்கு 1.78 கோடி, ஆரணியாறு கோட்ட வடிநிலத்தில் 10 பணிக்கு 1.76 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்டகோட்டத்தில் 6 பணிக்கு 24 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 6 பணிக்கு 47 லட்சம், சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 10 பணிக்கு 1.55 கோடி என மொத்தம் 51 பணிக்கு 7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 25ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 6 ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் தற்போது கால்வாய்களில் ஆகாயத்தாமரை, குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் கான்ட்ராக்டர்கள் உடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில், அக்டோபர் முதல்வாரத்தில் தூர்வாரும் பணியை முடித்து இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் நடந்தது என்பது தொடர்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். இதற்காக, வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு நாளும் நடந்த பணிகளை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செய்யும் கான்ட்ராக்டர்களின் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் தரப்படும். அந்த ஸ்டிக்கரை பயன்படுத்தி வாகனங்களை எந்த தடையுமன்றி இயக்கி கொள்ளலாம்.

பருவமழை தீவிரமடையும் போது, ஊழியர்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைமுன்னெச்சரிக்கை பணிகளை செய்யாதவர்களுக்கு பில் தொகை வழங்கப்படாது. அடுத்த முறையும் அவர்கள் இந்த பணிகளில் கலந்து கொள்ள முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்ைக பணிகளை முறையாக நடைபெறவில்லை என்ற புகார் எழுந்த நிலையில் தினமும் பணிகள் நடந்தது தொடர்பாக புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் கெடுபிடி காட்டியிருப்பது பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்ைக பணிக்கே 45 சதவீதம் கமிஷன்: பொதுப்பணித்துறையில் பெரிய அளவிலான திட்டப்பணிகளுக்கு மட்டுமே கமிஷன் பெறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பராமரிப்பு பணிக்கு கூட கமிஷன் பெறும் நிலைதான் உள்ளது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு 45 சதவீதம் கமிஷன் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கமிஷன் தொகை கொடுத்தால் மட்டுமே பில் ெதாகை செட்டில் செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் அழுத்தம் தரப்பட்டது. இதை தொடர்ந்து பணியை தொடங்குவதற்கு முன்பே கான்ட்ராக்டர்கள் கமிஷனை செட்டில் செய்தனர். அதன்பிறகே அவர்கள் பணிகளை தொடங்க அனுமதிக்கப்பட்டனர் என்று கான்ட்ராக்டர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories: