நிட்டர் நிறுவனத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் தொழில்நுட்ப வல்லுனர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பெக்ரியால் பேச்சு

சென்னை : நிட்டர் நிறுவனத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய   மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால்  தொழில்நுட்ப வல்லுனர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மத்திய மனிதவள ேமம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய தொழில்கல்வி ஆசியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை  தரமணியில் செயல்பட்டுவருகிறது.  இந்நிலையில் இந்த பயிற்சி மையத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்  போது பயிற்சி மையத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த வெளி உடற்பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  இதனைத் தொடர்ந்து மையத்தில்  பயிற்சி பெற்றும் பயிற்சியாளர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் பிஎச்டி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதில் சென்னை தேசிய  தொழில்கல்வி ஆசியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுதேந்திர நாத் பாண்டா, தலைவர் விஎஸ்எஸ் குமார் உள்ளிட்ட ஆசியர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் பேசியதாவது : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிறுவனம் தொழில்கல்வியில் முதுகலை மற்றும் பிஎச்டி படிப்பை  வழங்குகிறது. நாம் அதிக அளவில் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப கல்வியில்  ஏற்படும் மாற்றங்களை நாம் கற்று கொள்ள வேண்டும். புதிய தொழில் தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டும்.

Related Stories: