ஒரே மாதத்தில் பொறியாளர்கள் டிரான்ஸ்பர் ரத்து ஏன்?: தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை விளக்கம்

சென்னை: பொதுப்பணித்துறையில் ஒரே மாதத்தில் அதிக அளவு பொறியாளர்களின் டிரான்ஸ்பரை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி ெபாறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்கள், பொறியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதே நேரத்தில் விருப்பத்தின் பேரிலோ அவர்கள் மாறுதல் கேட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி உள்ளிட்ட பல பணிகளுக்காக உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என 66 பேருக்கு மாற்றுப்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதில், சிலர் மாற்றுபணி இடத்திற்கு போக விருப்பம் இல்லாததால் கரன்சியுடன் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தை அணுகியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, மாற்றுப்பணிக்கு நியமிக்கப்பட்ட 42 பேரின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இது ெதாடர்பாக தினகரன் நாளிதழில் செப்டம்பர் 30ம் தேதி செய்தி ெவளியானது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக பொதுப்பணித்துறை முதன்ைம தலைமை பொறியாளர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டது.

அதன்பேரில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், குடிமராமத்து மற்றும் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்வதற்கு இத்துறையில் பணிபரியும் 65 உதவி பொறியாளர்கள்/இளநிலை பொறியாளர்கள் மற்றும் 29 உதவி செயற்பொறியாளர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணையிடப்பட்டது. இதில், 40 உதவி பொறியாளர்கள், 17 உதவி பொறியாளர்கள் மாற்றுப்பணியில் சேர்ந்துள்ளனர். இப்பொறியாளர்களின் பணி அவசியம் கருதி தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணி ஆணையினை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர் அளித்த பரிந்துரையின் பேரில் 24 உதவி பொறியாளர்/இளநிலை பொறியாளர்கள் மற்றும் 13 உதவி பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணி பணி ஆணை நிர்வாக காரணங்களின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது. ேமலும் மாற்றுப்பணியில் ஆணையின் படி சேராது 1 உதவி பொறியாளர் மீது விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: