தாம்பரம் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு பணிகளை விரைந்து முடிக்க  வேண்டும், என அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.  தாம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று மதியம் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் வந்து, ஆய்வு செய்தனர். பின்னர், நகராட்சி பகுதிகளில் செய்யப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையராஜா, சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் ஆல்பர்ட் அருள் ராஜ் உட்பட பலர் உடன் சென்றனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர், தாம்பரம் நகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை விரைவாக முடிக்க முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: