ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவினை அகண்ட தீபம் ஏற்றி வைத்து ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று துவக்கி வைத்தார். நேற்று காலை சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு, பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்பளித்தனர்.  நவராத்திரி கொலு, ஆலய பிரகாரத்தில் அமைக்கப்பட்டது. இதில்  சமீபத்தில் திறக்கப்பட்ட தியான மண்டபம்,பங்காரு அடிகளாரின் 50ம் ஆண்டு ஆன்மிக பணிகள் குறித்து காட்சிகள் அமைக்கப்பட்டன. சுமார் 11 மணியளவில் பங்காரு அடிகளார்,   அம்மனுக்கு தீபாராதனை செய்து,  அகண்ட தீபத்தை ஏற்றினார்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தாமரை, சக்கரம், முக்கோணம், அறுகோணம், செவ்வகம், ஐங்கோணம்  ஆகிய வடிவங்களில் ஆன சக்கரங்களின் மீது அமர்ந்திருந்த சிறுமிகள், பெண்கள், தங்களது கைகளில் தீப விளக்குகள் ஏற்றி, அகண்ட  தீபம் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.  பின்னர் பங்காரு அடிகளார், அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபட்டார். இதை தொடர்ந்து பக்தர்களும் எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். நேற்று தொடங்கிய நவராத்திரி விழா, அக்டோபர் 8ம் தேதி வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன்  நடைபெறும். விழா ஏற்பாடுகள் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் செந்தில்குமார்  ஆகியோர் மேற்பார்வையில், சென்னை மாவட்ட சாலிகிராமம் மற்றும் எண்ணூர் சக்தி பீடங்கள் சார்பில் செய்யப்பட்டது.

Related Stories: