ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 96 ஆதரவற்றோர் மீட்பு

சென்னை:  சென்னையில் உள்ள சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களில் ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் அதிகளவில் சுற்றி வந்தனர். இதனால் சில நேரங்களில் தண்டவாளத்தை கடக்கும் போது மனவளர்ச்சி குன்றியவர்கள் ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், பயணிகளுக்கு இடையூறு செய்யும் ஆதரவற்றோர்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்க ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 22ம் தேதி சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ெசன்னை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கேட்பாரற்று அநாதையாக சுற்றித்திரிந்த 35 நபர்கள், 60 பிச்சைக்காரர்கள் மற்றும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என மொத்தம் 96 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைத்தனர்.

Related Stories: