கொசு உற்பத்திக்கு காரணமான கட்டிட உரிமையாளர்களுக்கு 80 ஆயிரம் அபராதம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட பகுதிகளில் கட்டுமான நிறுவனங்களில் உள்ள கழிவுகளால்  கொசு உற்பத்தியாகி,   சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆலந்தூர்  மண்டல உதவி கமிஷனர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில், மண்டல சுகாதார அலுவலர்  மல்லிகா தலைமையிலான துப்புரவு அலுவலர்கள்,  சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் திடீர்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 8 கட்டிடங்களில் கொசுக்கள்  உற்பத்தியாகும் வகையில் கட்டிட கழிவுகளை குவித்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, மேற்கண்ட 8 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: