வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மதுரை: தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இனி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320  மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விழாவில் பேசிய அவர், மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டடங்கள் பொதுப்பணித்துறையால் ஆய்வு செய்யப்படும் என்றும், 70 லட்சம் மாணவர்களை  சிறந்த மாணவர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், 8, 9 மற்றும் 10ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என்றார். மாணவர்களின் திறனை உயர்த்தவே 5 மற்றும்  8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மதுரை விரகனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி கல்வித்துறை சார்பில் விரைவில் 2வது கல்வித் தொலைக்காட்சி  தொடங்கப்படும் என்றும், 3 ஆண்டுகளில் மாணவர்களின் திறன் உயர்த்தப்பட்டு, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றார்.

Related Stories: