சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி கோயில் அறங்காவலர் தலைவராக சேகர்ரெட்டி நியமனம்: மேலும் 6 நகர கோயில்களுக்கும் தலைவர்கள் அறிவிப்பு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி கோயில் அறங்காவலர் தலைவராக சேகர்ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருபவர் சேகர்ரெட்டி. இவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்தார். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் 2016  டிசம்பர் 8ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து 12 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல சேகர்ரெட்டி, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் பங்குதாரர்களாக  உள்ள எஸ்.ஆர்.எஸ்.மைனிங் நிறுவனத்தில் ₹9 கோடியே 76 லட்சத்து 52 ஆயிரம் சிக்கியது. மேலும், அவருக்கு வேண்டிய வெங்கடேஷ் என்பவரிடம் 11 லட்சத்து 86 ஆயிரம், உமாபதியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய், மேலும் நிறுவனத்துக்குச்  சொந்தமான காரில் இருந்து 24 கோடி சிக்கியது. மொத்தம் 33 கோடியே 89 லட்சம் சிக்கியது. இவை அணைத்தும், மத்திய அரசால் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளாகும்.

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட உடன் புதிய நோட்டுகள் அவரது வீடு மற்றும் அவர் பங்குதாரராக உள்ள அலுவலகத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும்  வழக்குப்பதிவு செய்தனர். அந்த நேரத்தில், தற்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், திருப்பதிக்குச் சென்றார். அவரை சேகர் ரெட்டி வரவேற்ற புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், திருப்பதி  தேவஸ்தானத்தின் உறுப்பினர் பதவியை சேகர் ரெட்டி ராஜினாமா செய்தார்.இந்தநிலையில், சேகர் ரெட்டி, தான் பங்குதாரராக உள்ள நிறுவனம் வருமான வரித்துறைக்கு முன் கூட்டியே ₹31 கோடிக்கு வரி கட்டியுள்ளோம். அதனால் தங்களிடம் இருந்து 33 கோடியே 89 லட்சம் சிக்கியுள்ளது. அதிகமாக ₹2 கோடியே 89  லட்சம்தான் சிக்கியது. இதனால் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் உள்ள இந்தப் பணத்துக்கு வரி கட்டுகிறோம் என்று தெரிவித்து, அபராத வரியை கட்டியது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை  தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால், திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் அல்லது சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி  தேவஸ்தான தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில் புதிய ஆந்திர அரசு, சேகர்ரெட்டியை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் திருமலை திருப்பதியின் தேவஸ்தான போர்டின் உறுப்பினர் பதவிகளை வழங்கி நேற்று அரசாணை பிறப்பித்தது.  இவரைப் போல, திருப்பதியில் உள்ள போர்டு தலைவராக பூமன கருணாகர் ரெட்டியும், டெல்லி போர்டு தலைவராக ராகேஷ் சின்கா எம்பி, பெங்களூர் போர்டு தலைவராக குபேந்தர் ரெட்டியும், ஐதராபாத்தில் உள்ள போர்டு தலைவராக கோவிந்த  ஹரியும், புவனேஸ்வர் போர்டு தலைவராக தஷ்வந்த்குமார் தாசும், மும்பை போர்டு தலைவராக அமோல்காலேயும் நியமிக்கப்பட்டுள்ளனர

Related Stories: