கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எண்ணூர் துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்தது. இன்று காலை முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் இன்று 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருவதால் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: