கூடலூர் அருகே யானை நடமாட்டம் அதிகரிப்பு: வனத்துறையினர் எச்சரிக்கை

கூடலூர்: கூடலூர் அடுத்த லாரஸ்டன் நம்பர்-4 செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூடலூர் சுற்றுவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பொதுமக்களும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிப்பதால், அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை விரட்டி வருகின்றனர். இதேபோல் கூடலூரில் இருந்து கோக்கால் வழியாக லாரஸ்டன் நம்பர்-4 பகுதிக்கு செல்லும் சாலையில் யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன. தற்போது சாலையின் இருபுறமும் செடிகள், புதர்கள் வளர்ந்து காணப்படுவதால், யானைகள் இருப்பது தெரியாமல் அவ்வழியாக செல்பவர்கள் யானைகளிடம் மாட்டி கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: